தொழிலதிபராக களமிறங்கிய சினேகா… குவியும் வாழ்த்துகள்!
ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என புகழப்படுபவரும், தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையுமான சினேகா தொழிலதிபராக களமிறங்கி இருக்கிறார்.
மாதவன் நடித்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் பிரசன்னா-சினேகா இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னரும் பிஸியான நடிகையாக சினேகா வலம் வருகிறார். லேட்டஸ்ட்டாக தளபதி விஜயின் ‘GOAT’ படத்தில் சினேகா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் கொண்ட சினேகா விதவிதமான சேலைகளை விரும்பி அணிபவர். புடவை கடைகளில் கூட, ”சினேகா கட்டிய புடவை வேண்டும்” என பெண்கள் விரும்பி கேட்கும் அளவுக்கு, சினேகாவின் புடவை தேர்வுகள் இருக்கும்.
இந்த நிலையில் தன்னுடைய புடவைகளின் மீதான ஆர்வத்தையே, தொழிலாக மாற்றி களமிறங்கி இருக்கிறார் சினேகா.
‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற பெயரில் பட்டுப்புடவை கடை ஒன்றினை சென்னை திநகரில் திறக்கிறார். நடேசன் பூங்காவின் அருகில் அமைந்துள்ள இந்த கடையின் திறப்புவிழாவானது, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) நடைபெறுகிறது.
இதில் முக்கிய நண்பர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். 12-ம் தேதியில் இருந்து பொதுமக்கள் சினேகாலயா சில்க்ஸில் பர்ச்சேஸ் செய்து கொள்ளலாம்.
தற்போது இதற்கான அழைப்பிதழை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா வெளியிட்டு இருக்கிறார். இதையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாரத் ரத்னா எஃபெக்ட்: பாஜகவை ஆதரிக்கும் சரண் சிங் பேரன்
எலக்ஷன் ஃப்ளாஷ்: நட்டா வருகை… திமுகவுக்கு ஷாக் கொடுக்குமா பாஜக?