தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகு சிலகாலம் நடிக்காமல் இருந்தார். கடந்த மாதம் வெளியான கப்ஜா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் தெலுங்குபடங்களில் பிரபலமான கதாநாயகிகளை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தால் படத்தின் வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்.
சிவாஜி படத்தில் 2007ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த பின் அதே வருடம் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் குத்து பாட்டு ஒன்றுக்கு வடிவேலு உடன் நடனமாடியிருந்தார்.
அதற்காக அப்போது அவர் வாங்கிய சம்பளம் 15லட்ச ரூபாய். அதன் பின் தமிழ் படங்களில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வது குறைந்துபோனது.
2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பின் இந்திய சினிமாவில் அதிகமாக தலைகாட்டாத ஸ்ரேயா கப்ஜா படத்திற்கு பின் தனிப்பாடலுக்கு கிளாமர் நடனமாட வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படமொன்றில் குத்துப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஸ்ரேயாவை அணுகினர்.
அதற்கு ஸ்ரேயா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாடலுக்கு ஆட ரூ.1 கோடியா என்று படக்குழுவினர் அதிர்ந்து போய் இருக்கிறார்களாம்.
இப்போதெல்லாம் எந்த மொழியில் படங்களை எடுத்தாலும் அதை பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட்டு அதிக வருமானம் பார்க்கிறார்கள். இதை மனதில் வைத்தே ஸ்ரேயா 1கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்களில் குத்துப்பாடல்கள் வைப்பது அவசியமாகி விட்டது. அதை ரசிப்பதற்கு தனி கூட்டமே உள்ளது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா குத்துப்பாடல் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?
12 மணி நேர வேலை மசோதா : சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு!