சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் மதகஜராஜா. 13 ஆண்டுகள் கழித்து இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாகிறது.
இந்த படத்தின் வெளியீட்டு விழா மேடையில் விஷால் பேசிய போது, அவருடைய கை, கால்கள் நடுங்கியபடி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பினர்.
உண்மையில் அன்றைய தினத்தில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் பாதிப்பு இருந்தாக கூறினார்கள். இந்த நிலையில், பிரபல பாடகி சுசித்ரா, தன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் வீட்டுக்கு வந்தார். இப்போது, அதுதான் அவரது கையை நடுங்க வைத்துள்ளது என்று கூறியிருந்தார். மேலும், விஷாலை கெட்ட வார்த்தை போட்டு திட்டி அனுப்பியதாகவும் சுசித்ரா வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை ஷர்மிளா சுசித்ராவை வெளுத்து வாங்கியுள்ளார். இது குறித்து ஷர்மிளா கூறியதாவது, “சுசித்ரா நல்ல பாடகி. திறமையானவர். ஆனால், அவர் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. சோசியல் மீடியாவில் எந்த ஒரு செய்தி விவாதமாகும் போதும், அதை பற்றி பேசுவதை சுசித்ரா வழக்கமாக கொண்டுள்ளார்.
சாதாரணமாக நாம் ஒரு நண்பர் வீட்டிற்கு போவதற்கு முன்பே போன் செய்து வீட்டில் இருக்கிறார்களா? என்று கேட்டு விட்டுதானே போவோம்.
ஆனால், விஷால் போன்ற ஒரு செலிபிரிட்டி போன் எதுவும் செய்யாமல் திடீரென்று வந்தார், கையில் ஓயின் பாட்டில் வைத்திருந்தார் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது?
சுசித்ராவே விஷாலை கூப்பிட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் சுசித்ரா சொல்வதெல்லாம் பொய். இதற்கு முன்னர் பலர் பற்றி சுசித்ரா தப்பாக நடந்து கொண்டார் என்று கூறியிருக்கிறார். எதற்காவது ஆதாரத்தை காட்டியுள்ளாரா?” என்று கேட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இடைத்தேர்தல் புறக்கணிப்பு: எடப்பாடி சொன்ன ஷாக் காரணம்!
3 மணி நேரத்தை 2 நிமிடம் ஆக்கிய சபாநாயகர் அப்பாவு: எடப்பாடி சொல்வது எதைப் பற்றி?