“இப்படி ஒரு அழகா?” : சீதாவின் போட்டோ வைரல்!

சினிமா

தென்னிந்திய திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சீதா.

புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தபோது அந்தப் படத்தின் நாயகனும், இயக்குநருமான பார்த்திபனுடன் ஏற்பட்ட காதல் 1989ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

சீதா திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்கவில்லை. இருவருக்குள்ளும் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக   2001ம் ஆண்டு இருவரும் குடும்பநல நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்றனர்.

 அதன்பின் சினிமாவில் கதாநாயகிவாய்ப்பு சீதாவுக்கு கிடைக்காமல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். சின்னத்திரை நடிகர் சதீஷை தனது 43வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் சீதா.

இந்த திருமண உறவும் அவருக்கு நீடிக்கவில்லை. 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மிகச்சிறந்த நடிகையாக உச்சத்தை தொட்டிருக்க வேண்டிய சீதா தனது காதல் திருமணங்களால் அந்த வாய்ப்பை தவற விட்டார்.

எனினும் தொலைக்காட்சி தொடர்களின் தவிர்க்க முடியாத நடிகையாக இன்றும் நடித்து வருகிறார். சினிமாவில் அம்மா வேடங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

கொரோனா பொது முடக்கத்தின்போது வீடுகளில் முடங்கி இருந்த நடிகைகள் பொழுதுபோக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதற்கு பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

இதனால் தற்போது சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களை தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மூலம் எடுத்து வெளியிடும்போக்கு அதிகரித்து வருகிறது.

இதில் வாய்ப்பு தேடும் கதாநாயகி முதல் வெற்றிபெற்ற நாயகிகள், நடிகர்கள் என எல்லோரும் இடம்பெற்றுள்ளனர். அதில் தற்போது சீதாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

 55 வயதை எட்டியுள்ள சீதா சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மாடலாக உடை அணிந்து அண்மையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் சீதா. அந்தப் புகைப்படங்களைபார்த்து, இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா? சீதாவுக்குள் இப்படி ஒரு தன்னம்பிக்கையா என என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இராமானுஜம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க?

+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *