நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் இவர் நடிப்பில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் அட்ராங்கி ரே , ஷமிதாப் , ராஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்த வகையில் தொடர்ந்து மும்பையில் நிகழ்ச்சிகள் பங்கேற்று வருகிறார் தனுஷ்.
இப்படியாக மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் மகளும் நடிகையுமான சாரா அலிகானும் கலந்து கொண்டார். மற்றவர்களை விட தனுஷுடன் அதிக நெருக்கம் காட்டிய சாரா, தனுஷின் கையை தன் கையால் வளைத்து மிக சகஜமாக வளைய வந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ், சாரா அலிகான் இருவரும் அட்ராங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். இருவரும் நட்பாகவே பழகுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சாரா அலிகானும் , தனுஷும் நெருக்கமாக இருப்பது பாலிவுட் தொடங்கி தற்போது கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் நண்பர்களா , இல்லை காதலர்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்