வாத்தி ஹீரோயின் சம்யுக்தாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாப்கார்ன் படம் மூலமாக மலையாள உலகில் அறிமுகமான நடிகை சம்யுக்தா தொடர்ந்து களரி படத்தின் வழியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த ஜூலை காற்றில் பெரிதாக கைகொடுக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் தனுஷுடன் சம்யுக்தா இணைந்து நடித்த வாத்தி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் அளித்தது.
இந்த நிலையில் சம்யுக்தா விரைவில் தன்னுடைய காதலரை மணம் புரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தான் படங்களில் நடிப்பதை வெகுவாக அவர் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சம்யுக்தா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை!
“ஒரு ரூபாய்க்கு 29 பைசாதான் வருது” : நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதில்!