நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் நேற்று (ஜனவரி 5 ) நடந்து சென்ற போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,
மும்பை விமான நிலையத்தில் நேற்று கம்பீரமாக நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
யசோதா படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அளித்த பேட்டியில் கண் கலங்கி பேசியிருந்தார்.
அப்போது, அவர் நான் இன்னும் சாகவில்லை லேசான உடல்நலக் குறைவு தான் மீண்டும் வருவேன் என்று பேசினார்.

இந்நிலையில், சொன்னது போலவே மீண்டும் எழுந்து நடந்து வந்த காட்சிகள் சமந்தா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து அமைதியாக சமந்தா நடந்து சென்ற நிலையிலும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சில ரசிகர்கள் அருகே வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
ஆனால், ரசிகர்களை பார்த்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நிலையிலும் நடிகை சமந்தா தனது பெரிய கண்ணாடியை கழட்டவில்லை.
அதே நிலையில் தான் சில ரசிகர்களுடன் செல்ஃபி போட்டோக்கள் எடுத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
எப்போதுமே ரசிகர்களை பார்த்தால் செம ஹாப்பியாக சிரித்து அவர்களையும் சந்தோஷப்படுத்தும் நடிகை சமந்தா ரோபோ போல பெரிதாக சிரிக்காமல் வெறுமனே செல்ஃபிக்கு போஸ் கொடுத்து விட்டு அங்கே இருந்து கிளம்பிச் சென்ற காட்சிகள் மனதளவில் அவர் பெரிதாக உடைந்துள்ளார் என ரசிகர்களை கமெண்ட் போட வைத்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரஷ்யாவின் போர் நிறுத்த அழைப்பும் தொடர் தாக்குதலும்!
டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல்- ஸ்டாலினுக்கு இரண்டு பரிட்சை!