“ஊ சொல்றியா” பாடல் முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன் – சமந்தா

சினிமா

மெகா ஹிட் பாடலான, புஷ்பா படத்தில் வரும் “ஊ சொல்றியா” பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா சில நாட்களாய் எந்தப் படங்களிலும் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார். இதனையடுத்து தற்போது ஓய்விலிருந்து திரும்பிய சமந்தா சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என பிசியாக இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இன்று (மார்ச் 17) தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊ சொல்றியா’ பாடலில் நடனமாடியது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர், “எனக்கு இந்தப் பாடலில் ஆடும்போது பயமாகவும், சவாலாகவும் இருந்தது. ‘ஊ சொல்றியா’ பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது நான் பயந்து நடுங்கினேன். ஏனென்றால், கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது எனக்குத் தெரிந்த விஷயம் அல்ல. அதனால் நடிகையாக ஓர் அனுபவத்தைப் பெறுவதற்காக அந்த பாடலில் நடித்தேன்.

’தி பேமிலி மேன் -2’ திரைப்படத்தில் எப்படி நடித்தேனோ அதேபோல் தான் புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊ சொல்றியா’ பாடலிலும் நடித்தேன். ஒரு பெண்ணாக இருப்பதால் பல இடங்களில் சில சிரமங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

நான் மற்ற பெண்களைப்போல் அழகாக இல்லை என்று நம்பிக்கை இழந்தும் இருக்கிறேன். அதன் பிறகு என்னைக் கடினமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்தி, அவற்றைக் கடக்கக் கற்றுக்கொண்டேன். அவைதான் நான் இப்போது ஒரு நல்ல நடிகையாக வளர்வதற்குக் காரணமாக இருந்தது” என சமந்தா தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஊழலில் ஊறிய கட்சி பாஜகதான் : மும்பையில் ஸ்டாலின் பேச்சு!

தேர்தல் பத்திர நிதி: அதிமுகவுக்கு ரூ.5 கோடி கொடுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம்!

எலெக்‌ஷன் ஃபிளாஷ்: ஸ்டாலினுக்கு சாதகமான அதிகாரிகள்… அதிமுக தயாரிக்கும் பட்டியல்!

உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *