தென்னிந்திய சினிமாவில் மிக பிஸியாக பல படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை சமந்தா நடித்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் குஷி.
சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் பிரச்சினை இருப்பதால் குஷி படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார்.
இந்த சிகிச்சைக்காக தன் அம்மாவுடன் நியூ யார்க் சென்று திரும்பினார். அதன்பிறகு உடலையும், மனதையும் நிலையாக வைத்துக் கொள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது, யோகா செய்வது, கோவில் பூஜைகளில் ஈடுபடுவது என தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஓர் புகைப்படத்தை ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
அந்த ஸ்டோரியில், “இரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை போன்றவை இந்த சிகிச்சை மூலம் கிடைக்கும் பலன்கள்” என்று சமந்தாவே குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் மோசடி நடந்தது எப்படி?
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!