மருத்துவமனையில் மீண்டும் சமந்தா: தொடரும் சோதனை!

சினிமா

உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகை சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியான சமந்தா, 2010-ஆம் ஆண்டு வெளியான யா மாயா சேஸ்வா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் பாணா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், கத்தி, மெர்சல், தெறி, மகாநதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நாயகியாக சமந்தா வலம் வந்தார்.

actress samantha admitted in hyderabad apollo hospital

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படத்தை வெளியிடவில்லை.

இதற்கான காரணம் சருமப் பிரச்சனை அலர்ஜியால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் பாதிப்பிற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

இதனை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டதாகவும், நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவதாகவும் தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.

actress samantha admitted in hyderabad apollo hospital

கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 10 நாட்களில் ரூ.33 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலா மருத்துவனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் நோய் பாதிப்பா என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

செல்வம்

திருவண்ணாமலை தீபம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
3