பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் தமிழில் சமுத்திரக்கனியுடன் ‘சித்திரை செவ்வானம்’ என்னும் படத்தில் நடித்தார்.
அந்த ஒரு படத்தோடு அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதற்கிடையில் பூஜா கண்ணனுக்கு அவருடைய காதலர் வினீத் என்பவருடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை பூஜா கண்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார்.
விரைவில் பூஜா கண்ணன்-வினீத் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#SaiPallavi Vera Level Dance in Her sister's engagement Function 🎊🎉🎇❤ pic.twitter.com/poJ7UjM4uU
— Manjari (@mazhil11) January 22, 2024
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி அவருடைய தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி நல்ல டான்ஸர் என்பதை ‘மாரி 2’ படத்தின் ரவுடி பேபி பாடல் மற்றும் பிரேமம் படத்தில் இடம்பெற்ற டான்ஸ் ஆகியவை நிரூபித்து இருந்தன.
இதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவது போல, சாய் பல்லவி விழாவில் டான்ஸ் ஆடி கலக்கி இருக்கிறார்.
தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து “SK21” படத்தில், சாய் பல்லவி நடித்து வருகிறார். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தமிழ் திரையுலகில் அசிங்கப்படுத்துகிறார்கள்” : வேல ராமமூர்த்தி வேதனை!
”ஒரு Cow அதாவது” பெங்களூர் புல்சை பிரியாணி போட்ட தமிழ் தலைவாஸ்