தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகத் திகழும் அஜித், விஜய் படங்களில் நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘தியா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தனுஷின் ‘மாரி 2’, சூர்யாவின் ‘என்ஜிகே’ படங்களில் நடித்தார். 2௦22-ம் ஆண்டு வெளியான ‘கார்கி’ படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை அளித்தது.
தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிகப்பெரியளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் சாய் பல்லவி தான் நடிக்கும் படங்களை மிகவும் செலெக்டிவாகத் தான் தேர்வு செய்து வருகிறார்.
இந்தநிலையில் அஜித், விஜய் படங்களில் சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அஜித்தின் ‘வலிமை’ படத்தில் முதலில் நடிக்க கேட்டது சாய் பல்லவியை தானாம். ஆனால் அதில் தன்னுடைய கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்று கூறி நடிக்க மறுத்துள்ளார்.
இதே காரணத்தினை சொல்லி விஜயின் ‘வாரிசு’, ‘லியோ’ படங்களில் நடிக்கவும் சாய் பல்லவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ‘போலோ சங்கர்’ படங்களையும் சாய் பல்லவி மறுத்துள்ளதாக தெரிகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”என்ன ஒரு மனுஷனாவே மதிக்கல” : மேடையிலேயே அழுத இளம் இயக்குநர்
போதைப்பொருள் கடத்தல்: திமுக அரசை கண்டித்து எடப்பாடி ஆர்ப்பாட்டம்!