நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகை ரம்பா. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு கனடா நாட்டுத் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது இரு மகள்கள் மற்றும் மகனுடன் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வருகிறார்.
கார் விபத்து
நடிகை ரம்பா சற்று நேரத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் எனது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு திரும்பும் போது எனது கார் மீது மற்றொரு கார் மோதியது.

இதில் நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் எனது இளையமகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெட்ட நாள் ,கெட்ட நேரம்.
தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைக் கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் ரம்பாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமார் ”நீங்கள் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி. கவனமாக இருங்கள். பிரார்த்தனைகளையும் அன்பையும் அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
இரங்கலுக்கு பதில் நன்றி: அண்ணாமலை விளக்கம்!