நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி நடிக்கும் புதிய சீரியல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரக்ஷிதா, பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2 மற்றும் 3 மூலம் பிரபலம் அடைந்தார். இது மட்டுமின்றி நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தன்னுடன் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். என்றாலும் தன்னுடைய கேரியரில் அவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளார்.
ரக்ஷிதா 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இது அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திடீரென யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
கன்னட நடிகர் ஜகேஷின் ‘ரங்கநாயகா’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் மிரட்டி இருந்தார். தற்பொழுது மீண்டும் சீரியலுக்கு திரும்பி உள்ளார் ரக்ஷிதா.
ஆம் ஜீ தமிழ் எடுக்கும் புது சீரியலில் அவர் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும் என்று தெரிகிறது. இதனால் ரக்ஷிதாவின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… பக்தர்கள் பரவசம்!
ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை : வணிகர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி