பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது கணவர் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கன்னட சீரியலைத் தொடர்ந்து தமிழ் சின்னத்திரையில் 2011ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
அதனைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 சீரியலிலும் கவினுக்கு ஜோடியாக மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில் பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின்னரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த ரச்சிதாவுடன், ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ’நாச்சியார்புரம்’ சீரியலில் அவரது கணவர் தினேஷும் சேர்ந்து நடித்தார். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களாக கணவர் தினேஷை பிரிந்து வாழும் ரச்சிதா தனது பெற்றோருடன் தனியாக வசித்து வருகிறார்.
ஆனாலும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சமூகவலைதளங்களில் அவ்வபோது ட்ரெண்ட் ஆனார்.
அப்போது சக போட்டியாளாராக பங்கேற்ற ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடன் நெருங்கி பழகியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், ”நான் கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார். செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்” என்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது தான் இன்னும் ரச்சிதாவிடம் இருந்து விவகாரத்து பெறவில்லை என்றும், வேண்டுமென்றால் ரச்சிதா விவகாரத்துக்கு கேட்டு நீதிமன்றத்திற்கு செல்லட்டும்” என்று தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பிரபலமான நடிகையாக வலம் வரும் ரச்சிதா, கணவரே ஆபாச மெசேஜ் அனுப்புவதாக புகார் தெரிவித்துள்ளது சின்னத்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!
கலைஞர் கோட்டமும் சில கண்ணீர்த் துளிகளும்! வியக்க வைக்கும் வேட்கைத் தொண்டர் எ.வ.வேலு