பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நடிகர் ரஞ்சித் தனது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டது குறித்து கண்கலங்க பேசி இருந்தார்.தன்னுடைய மனைவி பிரியா ராமன் தான் குழந்தையை ரொம்பவும் கவனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.
அப்போதுதான், ரஞ்சித்துக்குள் இருக்கும் சோகமான விஷயம் வெளியே தெரிய வந்தது. இப்போது, ரஞ்சித்தின் மனைவியான பிரியா ராமன் தன்னுடைய குழந்தை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து நடிகை பிரியா ராமன் கூறியதாவது,’என் மகனுக்கு ஆட்டிசம் பாதித்திருந்ததால், உறவினர்கள் அதிகமாக காயப்படுத்தினார்கள். ஆறுதல் சொல்வதாக நினைத்து நீ என்ன தப்பு செய்தாய் என்று கேட்பார்கள். இதையெல்லாம் கேட்டு நான் அழுதுள்ளேன். இப்போது, நான் என் மகன் ஆதித்யாவின் தாய் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
எல்லவற்றையும் தாண்டி நாங்கள் என்னுடைய மகனை சந்தோஷமாக வளர்த்து மகிழ்கிறோம். ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது பெரிய காரியம். அதிலும் ஆட்டிசம் பாதித்த குழந்தையை வளர்ப்பது ரொம்பவும் கஷ்டம். கடவுள் என்னை நம்பி அந்த குழந்தையை கொடுத்துள்ளார். நான் சோகமாக இருந்தால் என்னை கட்டிபிடித்துக் கொள்வான். அப்போது அவனிடத்தில் இருந்து பாதுகாப்பு உணர்வு கிடைக்கும்.
எங்கு சென்றாலும் அவனை அழைத்து செல்வேன். பாடல், விளையாட்டு எல்லாம் அவனுக்கு பிடிக்கும் . அவனுடைய வாழ்க்கையை அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்’ என்கிறார்.
நடிகர் ரஞ்சித்துக்கும் பிரியா ராமனுக்கும் இரண்டு மகன்கள் உண்டு. இதில், மூத்த மகன் ஆதித்யாவுக்குதான் ஆட்டிசம் பாதித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ’போலீஸ் பூத்’ : கமிஷனர் அருண் தகவல்!
கங்குவா : ட்விட்டர் விமர்சனம்!