சென்னை நெற்குன்றத்தில் நடிகை பவுலின் ஜெசிகா நேற்று (செப்டம்பர் 17) மாலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம் நடிகை பவுலின் ஜெசிகா. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த அவர் சமீபத்தில் வெளிவந்த வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
சென்னை நெற்குன்றம் அருகே அன்னம்மாள் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை ஜெசிகா வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தனது அறையில் நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ஜெசிகாவின் உடலை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது அறையில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், “ நான் ஒருவரை காதலித்து வந்தேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்க மறுத்ததால் என்னால் வாழ முடியவில்லை.
வாழவும் விருப்பமும் இல்லை. எனவே இந்த விபரீத முடிவை எடுக்கிறேன். எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று ஜெசிகா எழுதி வைத்துள்ளார்.
இதனைதொடர்ந்து நடிகை ஜெசிகாவின் செல்போனை கைப்பற்றியுள்ள போலீசார், நடிகையின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமுள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை!
நள்ளிரவில் நடந்த கோர விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!