நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!

நடிகை பார்வதி நாயர் வீட்டில் 9 லட்சத்துக்கும் மேலான பொருட்கள் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் பார்வதி, அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், 2010வது ஆண்டில் மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி குயின் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014வது ஆண்டில் வெளியான ’நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வந்த நபர் ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்று உள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பார்வதி நாயரின் புகாரைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

திமுக அரசைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

சொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் அதிமுக நடத்திய உண்ணாவிரதம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts