nivetha pethuraj false allegations

வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம்… கார் ரேஸ் குறித்து எதுவும் தெரியாது: நிவேதா பெத்துராஜ்

சினிமா

‘ஒரு நாள் கூத்து’, ‘சங்கத்தமிழன்’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சமீபகாலமாக  நிவேதா குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வலம் வந்தன.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும், ”இதற்கு நீங்கள் அமைதியாக இருக்கக்கூடாது” என, நிவேதா பெத்துராஜை சமூக வலைதளங்களில் டேக் செய்து தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில் தன்னைப்பற்றி வெளியான தவறான தகவல்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”எனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய்யான செய்திகள் அண்மையில் பரப்பப்படுகிறது.

nivetha pethuraj false allegations

என்னைப்பற்றி அப்படி பேசுபவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு, மனிதநேயத்துடன் அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என நினைத்துத் தான் நான் அமைதியாக இருந்தேன். சில நாட்களாகவே நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறோம்.

இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன்பு தயவு செய்து யோசிக்கவும். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். 16 வயதில் இருந்தே சுயமாக சம்பாதித்து வருகிறேன்.

என் குடும்பம் இன்னும் துபாயில் தான் வசித்து வருகிறது. நாங்கள் சுமார் 20 ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறோம்.

சினிமா துறையில் கூட எனக்கு பட வாய்ப்பு கொடுக்குமாறு எந்த தயாரிப்பாளரையோ, இயக்குநரையோ, ஹீரோவையோ நான் கேட்டது கிடையாது. இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன்.

nivetha pethuraj false allegations

அது எல்லாமே தானாக வந்த வாய்ப்புகள் தான். நான் வேலைக்காகவோ, பணத்திற்காகவோ எப்பொழுதும் பேராசைப்பட்டதே இல்லை, இனியும் அப்படித்தான் இருப்பேன்.

என்னைப்பற்றி இதுவரை பேசப்பட்ட எந்த தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002-ம் ஆண்டில் இருந்து துபாயில் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம்.

2013-ம் ஆண்டில் இருந்து ரேஸிங் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது. சென்னையில் கார் ரேஸ் நடத்தப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

nivetha pethuraj false allegations

நீங்கள் சித்தரிப்பது போன்று நான் அந்த அளவுக்கு முக்கியமானவள் அல்ல. நான் மிகவும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையில் நிறைய போராட்டங்களுக்கு பிறகு இந்த இடத்தில் இருக்கிறேன்.

தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையைத் தான் வாழ விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களை போன்று தான் நானும்.

இது தொடர்பாக நான் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதநேயம் இருக்கிறது, அவர்கள் என்னை இவ்வாறு அவதூறு செய்ய மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

ஒரு குடும்பத்தின் பெயரை கெடுக்கும் முன்பு அந்த தகவலை உறுதி செய்யுமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”,என தெரிவித்துள்ளார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மேரி கிறிஸ்துமஸ், லவ்வர், லால் சலாம் படங்களின்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

பாஜகவின் தேர்தல் பத்திர ரகசியங்கள்..தேர்தலுக்கு முன்பு வெளியிட முடியாது..SBI சொல்வதன் பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம்… கார் ரேஸ் குறித்து எதுவும் தெரியாது: நிவேதா பெத்துராஜ்

  1. அப்ப 50 கோடி வீட்டில் வச்சிருந்தது பொய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *