நடிகைகள் நித்யா மேனன், பார்வதி, பத்ம பிரியா ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவால் அவர்களது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நித்யா மேனன், பார்வதி, பத்மபிரியா மூவரும் இன்று (அக்டோபர் 28) தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர்.

அதில் ”பிரக்னன்சி கிட்” மற்றும் ”பேபி நிப்பிள்” இடம் பெற்றிருந்தது, அந்த பிரக்னன்சி கிட் இரு கோடுடன் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
நித்யா மேனனை தொடர்ந்து நடிகர் பார்வதி, பத்ம பிரியா உள்ளிட்டோரும் இதே புகைப்படத்தை பகிர்ந்து “ஆச்சரியம் தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவுகள் அவர்களது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தின் புரோமோஷன் இது என்பது தெரியவந்தது.
அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடிகைகள் பார்வதி, நித்யா மேனன், பத்மப்ரியா உள்ளிட்டோர் கர்ப்பிணிகள் போல் நடிக்கின்றனர்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், நடிகைகள் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
நித்யா மேனன் இறுதியாக தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்திருந்தார். திருச்சிற்றம்பலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் சாதனையும் படைத்தது.
நடிகை பார்வதி தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
மோனிஷா