சரோஜினி நாயுடுவாக ராமராஜன் பட நாயகி!

சினிமா

ராமராஜன் பட நாயகியான சாந்திபிரியா சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் ராமராஜன் நடிப்பில் 1987ல் வெளியான படம் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’.

இந்ததிரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்  கதாநாயகனாக ராமராஜனும் கதாநாயகியாக பானுப்ரியாவின் சகோதரி நிஷாந்தி என்னும் சாந்திபிரியாவும் நடித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 1994 ஆம் ஆண்டு இவர் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு நடிக்காமல் இருந்து வந்தார் 

இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துஇருக்கிறார்.

அதுகுறித்து சாந்திபிரியா வெளியிட்ட பதிவில், ‘இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு: அபராதத்துடன் மனு தள்ளுபடி!

முடிந்தது மாநிலங்களவை முதல் அமர்வு: நேரம் விரயமென அவைத் தலைவர் வருத்தம்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *