உன் புருஷன் வெளிநாட்டுல இருக்குறாப்ல , நீ தனியாதானே இருக்கிறாய்.. என்று கூறி அருவெறுப்பாக பேசியதாக நடிகர் மணியன்பிள்ளை ராஜூ மீது நடிகை புகார் கூறியுள்ளார்.
மலையாள பட நடிகைகளை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக ஹேமா கமிஷன் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து, பல நடிகைகள் நடிகர்கள் , இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
பூவிழி வாசலிலே படத்தில் நடிகர் சத்யராஜின் நண்பராக நடித்திருந்த மணியன்பிள்ளை ராஜூ மீதும் நடிகை மினு முனீர் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து மினு முனீர் கூறுகையில், “ஒரு படத்தில் மணியன்பிள்ளை ராஜூவின் மனைவியான நான் நடித்திருந்தேன். அப்போது, செட்டுக்கு ஒருமுறை என்னுடன் காரில் வந்தார்.
நான் கார் ஓட்டிக் கொண்டிருக்க, எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்டார். எனது கணவர் வளைகுடா நாட்டில் இருக்கிறார் என்று நான் சொன்னேன். உன் கணவர் வெளிநாட்டுல இருக்குறப்போ, நீ இங்க தனியா இருந்து என்ன பண்ற? அப்படிங்கிற ரீதியில் அருவெறுப்பாக பேசினார்.
அந்த பயணத்தின் போது, பல முறை இதே கேள்வியை மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டார். நான் கணவர் வெளிநாட்டில் இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு விசுவாசமாகத்தான் இருப்போம் என பதிலளித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹேமா கமிஷனனின் அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்த மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் நிர்வாக கமிட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்தது. அம்மாவின் தலைவராக நடிகர் மோகன்லால் உள்ளார்.
தற்போது, மோகன்லால் சென்னையில் படபிடிப்பில் இருந்ததால் அவரால் பங்கேற்க முடியாமல் இருப்பதால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அம்மா பொதுச் செயலாளராக இருந்த இயக்குநர் ரஞ்சித் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியுள்ளார். நடிகர் ஜெகதீஷ் அம்மா பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தோள்பட்டை வலி… பெற்றோரிடம் கூட சொல்லாத சுமை தூக்கும் சிறுவன்! கலங்கடித்த நீயா நானா?
“நீங்கள் இந்துவா ?” – நமிதாவுக்கு நடந்தது என்ன? மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விளக்கம்!