லட்சுமி மேனனின் புதிய பட அப்டேட்!

சினிமா

சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். அதனை தொடர்ந்து விக்ரம்பிரபு ஜோடியாக கும்கி படத்தில் நடித்தார் இரண்டு படங்களும் பம்பர் ஹிட் அடித்தன.

இருந்தபோதிலும் அவரால் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. றெக்க படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடி போட்டார். அந்தப்படம் வெற்றி பெறவில்லை என்பதுடன் புதிய பட வாய்ப்புக்கள் இன்றி இருந்தார்.

தமிழ் சினிமாவில் அனைவரும் திரும்பி பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் அடையாளப்படுத்திய இயக்குநர் அறிவழகன்.

இவரது இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகும் சப்தம் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை, திட்டமிட்டபடி படக்குழுவினர் முடித்துள்ளனர். விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இதில் ஆதி, லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன என கூறப்படுகிறது.

நடிகை லட்சுமி மேனன் இப்படத்தில் இணைந்தது குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டராக தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திரில்லர் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன் இப்படத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படத்தில் இந்த வெற்றிக்கூட்டணிக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இராமானுஜம்

டிஜிட்டல்  திண்ணை: வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கும் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ்

ஈரோடு கிழக்கு : மின்னம்பலம் சர்வே முடிவு! -மக்களின் மனக்கணக்கு இதுதான்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.