தமிழில் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் முதல் படத்திலேயே பிரபலம் அடைவார்கள். அப்படி முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை அசர வைத்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
கேரளாவை சேர்ந்த இவர் தனது 15 ஆவது வயதில் ‘சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். சசிகுமாருக்கு ஜோடியாக இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.
தொடர்ந்து தமிழில் கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன் போன்ற பல வெற்றி படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் தாங்கள் காதலிக்கும் விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால் லட்சுமி மேனன் சற்றே வித்தியாசமாக தான் காதலிப்பதை சமூக வலைதளத்தில் பதிவாக வெளியிட்டார்.
இதற்கிடையில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன், சமீபகாலமாக படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது யோகிபாபு ஜோடியாக ‘மலை’ மற்றும் ஆதி ஜோடியாக ‘சப்தம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
#laksmimenon Recent Dance 💃 pic.twitter.com/VecrlurgcC
— Manjari (@mazhil11) April 16, 2024
அதில் அவரை பார்த்து ரசிகர்கள் “லட்சுமி மேனனா இது?” என்று கேட்கும் அளவிற்கு எடை கூடி ஆளே வித்தியாசமாக இருக்கிறார். இந்த மாற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனன் மீண்டும் பிட்டாக தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க வேண்டும், என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி உணவகம்… மீண்டும் படகு போக்குவரத்து: தமிழிசையின் “அக்கா 1825” தேர்தல் அறிக்கை!
“எங்களுக்கு இத்தனை வயது தான் வித்தியாசம்” – உண்மையை உடைத்த இந்திரஜா சங்கர்..!