லைலாவை பாடாய்படுத்தும் அந்த நோய்… 44 வயதிலேயே இப்படியா?

Published On:

| By Kumaresan M

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக கருதப்பட்டவர்களில் நடிகை லைலாவும் ஒருவர். ‘ஏ நீ லூசாப்பா ‘என்று லைலா பேசிய வசனம் தமிழக ரசிகர்களிடையே ரொம்பவே பிரபலம். விஜயகாந்த் நடித்து வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

கோவாவை சேர்ந்த லைலா 2006 ஆம் ஆண்டு ஈரான் நாட்டை சேர்ந்த பிசினஸ்மேன் மெக்தினியை மணந்தார். பின்னர், சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் செட்டிலான நடிகை லைலா, கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் வெளியான கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.actress laila about her laugh

இந்நிலையில், சப்தம் படத்தின் புரேமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற லைலா, தான் சிரிப்பு நோயால் அவதிப்படுவதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது. அப்படி நிறுத்த முயன்றால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.

லைலா இப்படி பேசியதும், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது, லைலாவுக்கு 44 வயதாகிறது. actress laila about her laugh

சிரிப்பு நோய் யாரை தாக்கும்?

உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாக, தன்னிச்சையாக, காரணமின்றி சிரிப்பது, அழுவது அல்லது சிரிக்க வேண்டிய அழவேண்டிய நேரங்களில் அளவுக்கு அதிகமாக செய்வது இந்த நோயின் முக்கிய பாதிப்பு ஆகும். இந்நோய் பெரும்பாலும் பக்கவாதம், அல்சீமர், பார்கின்சன்ஸ், மூளையில் காயம் உள்ளவர்களை தாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share