ரசிகர்களுக்கு குஷ்பு கொடுத்த ஷாக்!

சினிமா

நடிகை குஷ்பு பாஜகவின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கிறார்.

திமுக, காங்கிரஸ் என எந்த கட்சியில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை சமூக வலைதளங்களின் மூலம் வெளிப்படையாக கூறக் கூடியவர்  குஷ்பு.

இதனால் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். குஷ்பு சமூக வலைதளங்களில் இருந்து ஏற்கனவே ஒரு முறை விலகி இருந்தார்.

தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கியபின் மீண்டும் சமூக வலைதளத்தில் இணைந்தார். மணிப்பூர் கலவரம், அதனால் பெண்கள் பாதிக்கப்பட்டது சம்பந்தமாக குஷ்புவிடம் இருந்து பதிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் அவர் சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளானார்.

இந்த நிலையில் சமூக வலைதள செயல்பாடுகளில் இருந்து குஷ்பு விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கடைசியாக வெளியிட்டுள்ள பதிவில்,  “எனக்கு கொஞ்சம் கட்டாய ஓய்வு தேவை என்பதால், சமூக வலைதள ரேடாரில் இருந்து சற்று விலகி இருக்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள். நன்றாக இருங்கள். பாசிட்டிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக சமீப காலமாக குஷ்பு சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு சமூக வலைதளங்களில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மணிப்பூர் விவகாரத்தில் கண்டனத்துக்கு உள்ளானார்.

இந்தசூழலில் சமூகவலைதளங்களில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

எம்ஜிஆர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பிறர் செயல்படுத்த முடியாது: அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் பதில்!

தென் மாவட்ட அரசியல் படத்தில் செல்வராகவன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *