கில்லி திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டரில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. வசூலில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் இன்றும் பலரது பேவரைட் ஆக உள்ளது.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படத்தின் ரீமேக் தான் கில்லி. தற்போது 20 வருடங்கள் கழித்து கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
பலரது பேவரைட்டாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். முக்கியமாக விஜய் திரிஷா காம்போ வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருக்கும். நடிகர் விஜய் கேரியரில் இந்த திரைப்படம் மிகப்பெரிய மைல் கல் என்றே சொல்லலாம்.
சில மாதங்களாகவே தமிழில் படங்கள் சரியாக ஓடவில்லை. ஆனால் கில்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூலே ரூபாய் 4 கோடிக்கு மேல் என்கின்றனர். பல தியேட்டர்களில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும்.
இப்படி இருக்கையில் திரிஷா கேரக்டரில் நடிக்க வேண்டியது நான்தான் என பிரபல நடிகை கிரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறும் பொழுது, “ஆரம்ப கட்டத்தில் திரிஷா இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகாத நிலையில் என்னிடம் தான் நடிக்க கேட்டனர்.
நான் மிஸ் செய்து விட்டேன்”, என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய சான்ஸை நடிகை கிரண் மிஸ் செய்துள்ளாரே என்று, வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரமுடன் ‘ஜெமினி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் கிரண். அதன் பிறகு வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்தார்.
வின்னர் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கடைசியாக தமிழில் ஆம்பள மற்றும் இளமை ஊஞ்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘டிடி நியூஸ்’… காவிமயமாக்க திட்டமா? – ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்!
தோ அவுர் தோ பியார்: விமர்சனம்!
சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை