நடிகை கார்த்திகா தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு, சேர்ந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு வெளியான கோ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திகா. நடிகை ராதாவின் மூத்த மகளான இவர் தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகி தந்தையுடன் இணைந்து பிசினசை கவனித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் இவர் தன்னுடைய விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வருங்கால கணவர் ரோஹித் மேனனின் புகைப்படத்தை பகிர்ந்து, ”உன்னை சந்திக்க வேண்டும் என விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை சந்திப்பது ஒரு மேஜிக்காக இருந்து, நாம் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது,” என காதலில் உருகி இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கார்த்திகா-ரோஹித் இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
உள்ளாட்சி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பாதது ஏன்?
வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!