கடந்த 1989 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் கரகாட்டகாரன். இந்த படத்தில் அறிமுகமாகி பின் ஏராளமான தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கனகா. நடிகர் ரஜினிகாந்துக்கு கூட ஜோடியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகை கனகா சினிமா துறையில் இருந்து காணாமல் போனார்.
அவரது புகைப்படங்கள் கூட வெளிவருவதில்லை. அவர் இறந்துவிட்டதாக கூட பல முறை வதந்திகள் கூட வந்திருக்கிறது. ஆனால், அவர் தனது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளி வரும். நடிகை கனகாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய கங்கை அமரன் கூட அவரை சந்திக்க முயன்று , முடியாமல் போனதாக சொல்வார்கள். யாரையும் அவர் சந்திக்கவும் விரும்பாமல் தனிமையில் வசிப்பதாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில், நடிகை குட்டி பத்மினி கனகாவை யதார்த்தமாக சந்தித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு திரைத்துறையை சேர்ந்த ஒருவரை நடிகை கனகா சந்தித்தது என்றால், அது குட்டி பத்மினி மட்டும்தான். அப்போது, இருவரும் டீ சாப்பிட்டு பேசி விட்டு வந்ததாக குட்டி பத்மினி தெரிவித்தார்.
காதல் தோல்வியாலும், சுற்றி இருந்தவர்களால் கிடைத்த ஏமாற்றங்களாலும் நடிகை கனகா தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மால் ஒன்றுக்கு சென்ற ரசிகர் ஒருவர் கனகாவை பார்த்துள்ளார். பின்னர், கெஞ்சி கூத்தாடி புகைப்படமும் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 51 வயதை எட்டியுள்ள நிலையில், அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் காணப்படுகிறார். அவ்வளவு எளிதாக கனகாவிடத்தில் யாரும் நெருங்க முடியாத நிலையில், அந்த ரசிகர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆந்திரா குவாரியில் சிக்கிய சீசிங் ராஜா… ரவுடியாக உருவாக்கிய பைனான்ஸ் கம்பெனிகள்!