அரை மணி நேரம் வொர்க் அவுட் ஆகலை… ஆனால்! – ‘கங்குவா’ குறித்து ஜோதிகா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்தநிலையில், கங்குவா படத்தின் முதல் அரை மணி நேரக் காட்சிகள் வொர்க் அவுட் ஆகவில்லை. ஆனால், கங்குவா ஒரு முழுமையான சினிமா அனுபவமாக இருந்தது என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த பதிவை சினிமா ரசிகையாக எழுதுகிறேன். நடிகர் சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உங்களது கனவை நினைத்து பெருமையாக இருக்கிறது சூர்யா. கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரக் காட்சிகள் வொர்க் அவுட் ஆகவில்லை. ஒரே இரைச்சலாக இருக்கிறது.

ஒவ்வொரு படங்களிலும் குறைபாடுகள் என்பது ஒரு பகுதி தான். ஆனால், கங்குவா பரிட்சார்த்த முறையில் எடுக்கப்பட்ட ஒரு படம். கங்குவா முழுமையான ஒரு சினிமா அனுபவமாக இருந்தது. தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் கேமரா வேலைப்பாடுகள் இருந்தது.

ஊடகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட நபர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், இவர்கள் பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள், அதிகப்படியான சண்டை காட்சிகள் உள்ள படங்களுக்கு இதுபோன்று விமர்சனம் செய்வதில்லை.

கங்குவாவை விமர்சனம் செய்யும்போது படத்தில் உள்ள நல்ல அம்சங்களை மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவா படத்திற்கு இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது வருத்தமளிக்கிறது.

கங்குவா டீம் பெருமையாக இருங்கள், எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதுவும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நைஜீரியாவில் பிரதமர் மோடி… இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

‘தினம் தினமும் உன் நினைப்பு’… ‘விடுதலை 2’ பாடல் ரிலீஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts