நடிகை ஸ்ரீதேவி வாங்கிய முதல் வீட்டை அவரது மகள் ஜான்வி கபூர் சுற்றிப்பார்த்த வீடியோ பதிவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி தமிழ் மற்றும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாகவும் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாகவும் இருந்தவர்.
தமிழகத்தின் தென்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காகத் துபாய் சென்ற ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தார். அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிறிது நேரம் ஒதுக்கி ஜான்வி கபூர் சென்னை வீட்டை சுற்றிப்பார்த்ததோடு வீடியோவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “வணக்கம் நண்பர்களே, எனது சென்னை வீட்டிற்கு வருக” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஜான்வி காட்டிய முதல் இடம் அவரது அப்பா போனி கபூரின் அலுவலகம். மேலும் இந்த வீடு தனது அம்மா வாங்கிய முதல் வீடு என்றும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவிக்கு திருமணம் ஆன பிறகு இந்த வீட்டை வாங்கியுள்ளார் என்று கூறிய ஜான்வி, அந்த வீட்டில் ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்களைக் காட்டினார்.

தொடர்ந்து சாப்பாட்டு அறை, உடற்பயிற்சி கூடம், படுக்கையறை, ஒரு “ரகசிய அறை” ஆகியவற்றையும் வீடியோவில் காட்டினார். ஜான்வி தனது அப்பா மற்றும் அம்மாவின் திருமண புகைப்படத்தைக் காண்பித்து ’இது ஒரு வித ரகசிய திருமணம் என்று நான் நினைக்கிறேன்.
அதனால் தான் அவர்கள் மிகவும் அழுத்தமாக இருப்பதாகத் தெரிகிறது’ என்று கூறியுள்ளார். இந்த போட்டோ சுவர் “உண்மையில் அம்மாவின் யோசனை” என்று ஜான்வி கபூர் தெரிவித்தார்.
“ரகசிய அறை” பற்றிக் குறிப்பிட்ட ஜான்வி, அறையில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. “நான் எனது சகோதரியுடன் (குஷி கபூர்) பெரும்பாலான நேரத்தை இங்கே செலவிடுகிறேன்” என்று கூறினார்.
அதன்பிறகு மொட்டை மாடிக்குச் சென்று, தனது ஜிம்மைக் காண்பித்து, அதைத் தனது “சரணாலயம்” என்று தெரிவித்தார்.
அந்த பகுதியில் சுவரில் உள்ள அனைத்து ஓவியங்களும் தானும் தனது சகோதரி குஷியும் சேர்ந்து வரைந்தவை என்று நினைவுகூர்ந்தார்.
பாலிவுட் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், கடைசியாக மிலி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
6 பேர் விடுதலை: மத்திய அரசு மறுசீராய்வு மனு!
அரசுப் பணி இடஒதுக்கீடு: புதுச்சேரியில் பாமகவினர் போராட்டம்!