Indraja Shankar engagement chennai

நிச்சயதார்த்த விழாவில் ஜொலித்த இந்திரஜா சங்கர்… மாப்பிள்ளை இவர்தான்!

சினிமா

நடிகர் ரோபோ சங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கருக்கு நேற்று(பிப்ரவரி 2) கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

விஜயின் ‘பிகில்’ வழியாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இந்திரஜா சங்கர் தொடர்ந்து தெலுங்கு படமான ‘பாகல்’ மற்றும் கார்த்தியின் ‘விருமன்’ ஆகியவற்றில் நடித்திருக்கிறார்.

அதோடு சின்னத்திரையில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர் சீசன் 1’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

நடிப்பு தவிர சமூக வலைதளங்களிலும் இந்திரஜா பயங்கர ஆக்டிவாக இயங்கி வந்தார். அந்த வகையில் தன்னுடைய முறைமாமன் கார்த்திக் என்பவருடன் அவ்வப்போது ரீல்ஸ், புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

Indraja Shankar engagement chennai

இந்த நிலையில் கார்த்திக்-இந்திரஜா நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திரஜா திருமணம் செய்யவிருக்கும் கார்த்திக் மதுரையை சேர்ந்த ‘தொடர்வோம்’ என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். தற்போது படங்களிலும் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

விரைவில் இந்திரஜா-கார்த்திக் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IND vs ENG: மிரட்டல் பேட்டிங்.. இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்

“தமிழக வெற்றி கழகம்” டைட்டிலே தோல்வி: அந்தணன் விமர்சனம்!

யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம்? ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *