நடிகை ஹன்சிகா மோத்வானி, காதலரான சோஹைல் கதுரியாவை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
தென்னிந்திய சினிமா உலகில் சின்ன குஷ்பு என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவர், தமிழில் ’மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ’எங்கேயும் காதல்’, ’பிரியாணி’, ’ஆம்பள’, ’புலி’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’சிங்கம்-2’, ’சேட்டை’, ’ரோமியோ ஜூலியட்’, ’போகன்’, ‘குலேபகாபலி’, ’மான் கராத்தே’, ’அரண்மனை 1’மற்றும் 2உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
கொஞ்ச நாட்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ஹன்ஷிகா, நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.
சோஹைல் கதுரியா, ஹன்சிகாவின் குடும்ப நண்பர் ஆவார்.
ஹன்சிகா மோத்வானியின் 11வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அறிவிப்பை, ஹன்சிகா கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
கூட, பாரிஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு அவருக்கு காதலர் ரொமாண்டிக்காக ப்ரபோஸ் செய்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
அத்துடன் அவரை டிசம்பர் 4ஆம் தேதி (நேற்று) திருமணம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஹன்சிகாவின் காதல் திருமணம் நம்முடைய மின்னம்பலத்தில், ’ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் கதுரியா: யார் தெரியுமா?’ என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடைபெற்றது.
அந்த திருமண சடங்குகளுக்குப் பின் அவர்களது திருமணம் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
திருமணத்திற்கு பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஹன்சிகாவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
ஜி தந்த ஜி20 அங்கீகாரம்: குஷியுடன் டெல்லி புறப்படும் எடப்பாடி
ஜி தந்த ஜி20 அங்கீகாரம்: குஷியுடன் டெல்லி புறப்படும் எடப்பாடி