‘சைத்தான்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அருந்ததி நாயர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
’பொங்கி எழு மனோகரா’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். தொடர்ந்து ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’, ’சைத்தான்’, ’கன்னி ராசி’, ’பிஸ்தா’ ’ஆயிரம் பொற்காசுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Bastar The Naxal Story : படம் எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம்
கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அருந்ததி தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்னை – கோவளம் கடற்கரை சாலையில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனமொன்று பைக்கின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது.
இதில் அருந்ததி நாயர் மற்றும் அவரது சகோதரர் இருவருக்கும் அடிபட்டுள்ளது. சோகம் என்னவென்றால் விபத்து நடந்து 1 மணி நேரத்திற்கு பிறகு தான், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் அருந்ததி நாயருக்கு பலத்த அடிபட்டுள்ளது.
இதனால் ரத்தம் ஏராளமாக வெளியேற தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Meetha Raghunath: திருமண பந்தத்தில் நுழைந்த ‘குட் நைட்’ நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்
இதுகுறித்து அவரின் சகோதரி ஆரத்தி நாயர், ”தமிழ்நாட்டில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மூன்று நாட்களுக்கு முன்னர் என்னுடைய சகோதரி சாலை விபத்தில் சிக்கியது உண்மை தான்.
அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டரில் உயிருக்கு போராடி வருகிறார்.
அவர் இதில் இருந்து விரைவில் மீண்டு வர அவருக்காக நீங்கள் ஆதரவும் பிரார்த்தனையும் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அருந்ததி நாயர் விரைவில் நலம்பெற வேண்டும் என, தீவிரமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – தமிழிசை பேட்டி!