அறந்தாங்கி நிஷாவிற்கு பெரிதாக அறிமுகம் தேவை இல்லை. விஜய் டிவியின் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருந்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.
பொதுவாக காமெடி துறையில் பெண்கள் சாதிப்பது குறைந்து வருகிறது. ஆனால் அறந்தாங்கியில் இருந்து வந்து விஜய் டிவியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் நிஷா.
தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டு பிறரை மகிழ்விப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்தவகையில் ஒரு சிறந்த கலைஞராக அறந்தாங்கி நிஷா திகழ்கிறார்.
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராமர் வீடு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி போன்ற பல ஷோக்களில் பங்கேற்று புகழ் பெற்றார்.
தொடர்ந்து பிக் பாஸில் பங்கேற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் மாரி, ஆண் தேவதை, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ( ஏப்ரல் 14) அவர் தனது கடை திறப்பு விழாவை நடத்தியுள்ளார். தனது வீட்டுக்கு பக்கத்திலேயே ‘நிஷா பேஷன்ஸ்’ என்ற துணி கடையை அவர் திறந்து உள்ளார்.
தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தாலும் தனக்கென ஒரு பிசினஸ் துவங்க வேண்டும் என்பது அவரது நெடுநாள் கனவாக இருந்து வந்துள்ளது. தற்போது அவரது கனவு நிறைவேற, இதைப்பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக நிஷாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?
Thalaivar 171: ரஜினிக்கு வில்லன் இவர்தான்… வேற லெவல் காம்போ!
Video: ஹீரோவாக அறிமுகம் ஆகும் KPY பாலா.. யாரும் எதிர்பாக்காத அறிவிப்பு..!!