நடிகையின் மேல் கை வைத்த டைரக்டர்… பிரபல டைரக்டரை காலரை பிடித்து தூக்கிய தந்தை!

சினிமா

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் குறித்து ஹேமா அறிக்கையில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள தகவல் பல அதிர்ச்சிக்கரமாக உள்ளன.

பிரபல டைரக்டர் ஒருவரை நடிகையின் தந்தை ஒருவர் காலரை பிடித்து தூக்கியதாக ஒரு சம்பவமும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. விவரம் இதோ!

மலையாளத்தில் செல்வ செழிப்புள்ள வீட்டில் இருந்து அறிமுக நடிகை ஒருவர் பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தினமும் படபிடிப்புக்கு தனது தந்தையுடன் அந்த நடிகை வந்துள்ளார். பிடப்பிடிப்பின் போது, அந்த நடிகை பல டேக்குகள் எடுத்தாலும் இயக்குநர் சாந்தமாக சொல்லி கொடுத்துள்ளார். ஒரு முறை கூட திட்டியது இல்லையாம்.

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது. அப்போது, தனது அறைக்கு அந்த நடிகையை இயக்குநர் அழைத்துள்ளார். முதலில் அவரிடத்தில் படம் ஹிட் ஆகும். உங்களுக்கு பல வாய்ப்புகள் கொட்டும் என்று பேசியவர், அப்படியே நடிகையின் மீது கை வைத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நடிகை உடனடியாக கதவை திறந்து அறையை விட்டு வெளியே ஓடி விட்டார். பின்னர், தனது தந்தையிடம் நடந்த விஷயங்களை கூற, அவர் கடும் கோபத்துடன் டைரக்டர் அறைக்கு வந்து சட்டை காலரை பிடித்து தூக்கியுள்ளார்.

நடிகையின் தந்தையிடன் கெஞ்சிய அந்த பிரபல டைரக்டர், இந்த விஷயத்தை வெளியே கூறி விட வேண்டாம். படத்துக்கு கெட்ட பெயர் வந்து விடுமென்று கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த படமும் வெளியாகி ஹிட் அடித்தது- ஆனால், அந்த நடிகைக்கு எந்த புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

டைரக்டர் செய்த லாபியால் அந்த புதுமுக நடிகைக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, அந்த நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் கண்கலங்கிய புஸ்ஸி ஆனந்த்!!

கண் அசைத்த அமித்ஷா… மத்திய அமைச்சராக இருந்து கொண்டே நடிக்க வருகிறார் சுரேஷ் கோபி!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0