‘ரொம்ப க்யூட்’… ரசிகர்களின் வாழ்த்துமழையில் நனையும் அமலாபால்!

Published On:

| By Manjula

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அமலா பால் கடந்த 2023-ம் ஆண்டு, தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஜகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில மாதங்கள் கழித்து, தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 5) அவருக்கு வளைகாப்பு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் இரு வீட்டினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு, ஜகத் தேசாய் – அமலா பால் தம்பதியினரை வாழ்த்தினர்.

வளைகாப்பு விழாவில் இருவரும் ஒரே மாதிரி உடையணிந்து, இந்த தருணத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடி உள்ளனர்.

தற்போது இதற்காக மெஹந்தி போட்டுக்கொண்டது முதல் வளைகாப்பு வரை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பான புகைப்படங்களை அமலாபால் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து அவருக்கு  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அமலா பால் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற ‘ஆடுஜீவிதம்’ படத்தில் நடிகர் பிரித்விராஜின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமலாக்கத் துறை வழக்கு ரத்து: தனியார் கட்டுமான நிறுவன வழக்கில் முக்கிய உத்தரவு!

Rain Update: அடுத்தடுத்து மூணு நாளைக்கு மழை இருக்காம்!

சிறையிலிருந்தே காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி…திணறவைக்கும் விஜயபாஸ்கர்…சூடுபிடித்துள்ள கரூர் களம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel