திறமையால மட்டும் தான் ஜெயிக்க முடியும்: அதிதி பதிலடி!

சினிமா

ஷங்கரின் மகள் என்பதாலேயே அதிதிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் வந்த நிலையில் அதற்கு பதிலடி தந்திருக்கிறார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள ‘விருமன்‘ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்களில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதுடன் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த படத்தில் அதிதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

actress aditi shankar replied

இதனை தொடர்ந்து  ‘மண்டேலா’ பட இயக்குநர் அஸ்வின் மடோனா இயக்கும் ‘மாவீரன்’. படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி நடிக்கவுள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

actress aditi shankar replied

படத்தின் பூஜையும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வருகின்றன.

இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் ஒருபுறம் வர, சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இதுகுறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

நடிகை ஆத்மிகாவின் அந்த ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விமர்சனங்களுக்கு எல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது.

actress aditi shankar replied

ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

  • க.சீனிவாசன்

கார்த்தி சூர்யாவுக்கு வைரக் காப்பு பரிசளித்த விருமன் விநியோகஸ்தர்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *