இளம் ஹீரோ ஒருவர் பரோட்டா மாஸ்டராக மாறிய சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
‘பாசக்கார நண்பர்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான யுவனுக்கு ‘சாட்டை’ பெயர் சொல்லக்கூடிய படமாக அமைந்தது.
தொடர்ந்து ‘கீரிப்புள்ள’, ‘காதலை தவிர வேறொன்றும் இல்லை’, ‘கமர கட்டு’, ‘இளமை’, ‘அய்யனார் வீதி’, ‘விளையாட்டு ஆரம்பம்’, ‘அடுத்த சாட்டை’ ஆகிய படங்களில் நடித்தார்.
இதுதவிர அவர் நடிப்பில் வெளியாகாத படங்களும் அதிகமாக இருக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாலா இயக்கத்தில், யுவன் நடிப்பதாக கடந்த 2௦17-ம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதற்கு பின்னர் அவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் யுவன் தற்போது பரோட்டா மாஸ்டராக மாறிய விஷயம் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் யுவன் தன்னுடைய திரையுலக வாழ்க்கை, பரோட்டா மாஸ்டராக மாறிய சம்பவம், ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த விஷயம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பாலா படத்திற்காக பரோட்டா செய்ய கற்றுக்கொண்டதாகவும், அந்த படம் நின்று போனதால் அதையே தொழிலாக மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”உங்க முடிவுல உறுதியா இருங்க,”, ‘செய்யும் தொழிலே தெய்வம்”, என யுவனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிராக திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்!