லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”.
இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், லால் சலாம் படம் குறித்து ஒரு இன்டர்வியூவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “நான் மிகப்பெரிய ரஜினி சார் ரசிகன். லால் சலாம் படத்தை பார்த்து விட்டேன் என்று தெரிந்ததும் ரஜினி சார் என்னை போன் செய்ய சொன்னார்.
நான் அவரிடம் பேசும் போது, ‘நீங்கள் இப்படி ஒரு படம் பண்ணதுக்காக உங்கள் ரசிகனாக பெருமைப்படுகிறேன். இந்த தைரியம் யாருக்கும் வராது, உங்கள் தைரியத்திற்கு சல்யூட்’ என்று கூறினேன். ரஜினி சார் படம் என்றாலே கைதட்டல்கள், விசில்கள் இருக்க வேண்டும் அதற்கான மாஸ் காட்சிகளும் லால் சலாம் படத்தில் உள்ளது. இந்த வேடத்தில் நடித்ததற்காக ரஜினி சாருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி லால் சலாம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!