அமெரிக்காவில் இளம்பெண்ணுடன் விஷால்: முகத்தை மூடி ஓடும் வீடியோ!
நியூயார்க்கில் நடிகர் விஷால் ஒரு பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ‘ரத்னம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
அடுத்த ஆண்டு கோடையில் வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்றுள்ள விஷால் ஒரு இளம்பெண்ணுடன் நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
Vishal 🙄🔥pic.twitter.com/jH6gBtpWzB
— MuTHU Movie updates (@Muthupalani_) December 26, 2023
அந்த வீடியோவில் ஒரு இளம்பெண்ணின் தோள் மீது விஷால் கைபோட்டுக் கொண்டு ஊரை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்களை வீடியோ எடுக்கும் நபர், ‘விஷால்’ என்று அழைக்கிறார். அவரை திரும்பிப் பார்த்த விஷால் உடனடியாக முகத்தை டி-ஷர்ட்டால் மூடிக் கொண்டு ஓடுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண் விஷாலின் புதிய காதலி என்றும், விஷால் படத்தின் புரொமோஷன் என்றும் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக அங்கு செல்வது விஷாலின் வழக்கம். அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய போது அவர்களுடன் ஊர்சுற்றுவதை வைரலாக்க எடுத்துப் பதிவிட்ட வீடியோதான் இது என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
99வது பிறந்தநாள்: தகைசால் தமிழர் நல்லகண்ணு விடுத்த முக்கிய கோரிக்கை!
அதிமுக பொதுக்குழு : கே.பி.முனுசாமி வராதது ஏன்?