பிரதமருக்கு நன்றி சொன்ன விஷால்
நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் காசிக்குச் சென்று தரிசனத்திற்கு பிறகு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் இறுதியாக ‘வீரமே வாகை சூடும்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது.
அதனைத் தொடர்ந்து, லத்தி படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. துப்பறிவாளன் 2 படத்தைத் தானே இயக்கி நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
தற்போது நடிகர் விஷால் தனது குடும்பத்தினருடன் காசிக்குச் சென்றுள்ளார். காசியில் தரிசனம் செய்த பிறகு, காசி கோவில் மறுசீரமைப்பு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம். பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன்.
கோவிலைப் புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக அனைவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காகக் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுக்குத் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மோனிஷா
கல்விநிலையங்கள் நன்கொடை வசூலிப்பது குற்றம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக உளவுத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கமா?