மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்

சினிமா

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது தவிர, விஷால் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 படம் பாதியில் முடங்கியுள்ளது. இது அல்லாமல் மூன்று படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் விஷால் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில்,  இன்னொரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே கதகளி என்ற படத்தில் இணைந்திருந்தனர். அப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது.

ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜ் விஷால் கூட்டணி அமையவிருக்கிறது.
இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

இதற்கான பேச்சுவார்த்தைகள்  நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் இக்கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விஷால் தரப்பில் கூறுகின்றனர்.

ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இப்போது சூர்யா, சிறுத்தைசிவா இணைந்திருக்கும் கங்குவா, விக்ரம் பா.இரஞ்சித் இணையும் தங்கலான், கார்த்தி நலன்குமாரசாமி இணையும் புதியபடம் ஆகியவற்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது சூர்யா, விக்ரம், கார்த்தி வரிசையில் விஷால் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.

வியாபார முக்கியத்துவம் உள்ள முன்னணி கதாநாயகர்களின் படங்களைத் தயாரிக்கும் நிறுவனம் தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ஆகியோரோடு இணைவது விஷாலுக்குப் பலமாக அமையும் என்கிறார்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில்.

இராமானுஜம்

கேங்க்ஸ்டர் முதல் அரசியல்வாதி வரை: யார் இந்த அதிக் அகமது?

“ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடர்வேன்”: அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *