அமெரிக்காவில் ஒரு பெண்ணுடன் ஓடும் வீடியோ குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்கிற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள விஷால் நியூயார்க் நகரில் இளம் பெண் ஒருவருடன் செல்லும் வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில், இளம்பெண் கழுத்தில் கை போட்டுக்கொண்டு விஷால் செல்லும் போது, அதை வீடியோ எடுக்கும் நபர் விஷால் என்று அழைக்கிறார். அவரைப் பார்த்ததும் விஷால் தனது முகத்தை மறைத்துக் கொண்டு ஓடுகிறார்.
இந்த வீடியோ கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதுதொடர்பாக விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
#Vishal #viralvideo pic.twitter.com/zc3tlB5qRq
— Harold (@MohamedAns96482) December 27, 2023
நேற்று, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மன்னிக்கவும் மக்களே…. சமீபத்திய வீடியோவை பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. தற்போது நியூயார்க்கில் இருக்கிறேன். இது நான் எனது உறவினர்களுடன் வழக்கமாக ஓய்வெடுக்கும் இடமாகும்.
ஒவ்வொரு வருடமும் மன அமைதிக்காக இங்கு வருவது வழக்கம். அதன்படி இங்கு வந்திருந்த போது கிறிஸ்துமஸ் தினத்தன்று உறவினர்களால் முடிவு செய்யப்பட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டது.
பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்களால் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
எனக்குள் எப்போதும் இருக்கும் குழந்தை தன்மையை வெளி கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால் தான் அப்படிச் செய்தேன்.
அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். இதை வைத்து சிலர் என்னை டார்கெட் செய்தனர். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சபரிமலை: மண்டல பூஜை நிறைவு – 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி!
சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாஜ்மகால்!
இந்திய ராணுவப் பொருட்கள் உற்பத்திக்கு ரஷ்யா ஆதரவு!