மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று (ஏப்ரல் 27) வெளியாக உள்ள நிலையில் விஷால் மற்றும் படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து படத்தின் டீசரை காண்பித்துள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளனர்.
அப்போது நடிகர் விஜய்யிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காண்பித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “எனது அன்பு சகோதரர் மற்றும் ஹீரோவை பார்த்ததில் மகிழ்ச்சி. மார்க் ஆண்டனி படத்தின் டீசரை பார்த்ததற்கும் நன்றி. உங்கள் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் என்றும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் “thalapathy vijay for mark antony” என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் டிரண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசரை இன்று மாலை நடிகர் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நடிகர் விஜய் மற்ற ஹீரோக்களின் படங்களை ப்ரோமோஷன் செய்வதில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருந்தார்.
எனவே, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் வெளியிட்டால், அவர் ப்ரோமோட் செய்யும் முதல் தமிழ் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அமித்ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
மாவீரன் படத்திற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?: தயாரிப்பாளர் விளக்கம்!