நடிகை லட்சுமி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற போவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால். இவர் 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்தநிலையில் நடிகர் விஷாலுக்கும், லட்சுமி மேனனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற போவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இதனை விஷால் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொதுவாக என்னை பற்றிய எந்த போலி செய்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்று உணர்கிறேன். ஆனால் இப்போது நடிகை லட்சுமி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற போவதாக வதந்தி பரவி வருவதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இது உண்மைக்கு புறம்பானது. இதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பதிலளிக்கிறேன். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட இமேஜை கெடுக்கிறீர்கள். நேரம் வரும்போது எனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சுதந்திர தினம்: ஜியோ அறிவித்த புதிய சலுகைகள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பொது பாடத்திட்டம்: கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்!