மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் விநாயகன். தமிழில் சண்டக்கோழி படத்தில் நடித்துள்ளார். நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அதோடு, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது இவரது வழக்கம். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களிடம் இவர் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் இவரை கைது செய்து போதை தெளிந்த பின் எச்சரித்து விடுவித்தனர்.
சமீபத்தில் கோவாவில் ஒரு டீக்கடை முன் குடிபோதையில் இவர் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி , அடிக்கடி சர்ச்சையில் ஈடுபடுவதை விநாயகன் வாடிக்கையாக வைத்துள்ளார்.
கொச்சி கலூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விநாயகன் வசித்து வருகிறார். மதுவுக்கு அடிமையாகியுள்ள இவர், ஜனவரி 20 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்று கொண்டு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். அதோடு, மக்களை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
இந்தக் காட்சியை பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை. புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடி போதையில் தொடர்ந்து, இது போன்ற காரியங்களில் விநாயகன் ஈடுபட்டு வருவதாக அக்கம் பக்கத்தினர் புலம்பி வருகின்றனர்.