விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படம் மற்றும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்துள்ளார். இதில் ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் ‘சியான் 61’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிலையில் சியான் விக்ரம் இன்று ( ஆகஸ்ட் 12 ) ட்விட்டரில் இணைந்துள்ளார். அவருக்கு தனியாக ட்விட்டர் பக்கம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் ஒரு சில மணி நேரங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர் .
அதுமட்டுமின்றி முதல் நாளே ட்விட்டர் நிறுவனம் அவருடைய பக்கத்திற்கு வெரிஃபைட் அந்தஸ்து வழங்கி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் வீடியோ வெளியிட்டுள்ள விக்ரம், “அவ்ளோ அன்பு இங்க இருக்கு, அதை நானும் அனுபவிக்க வந்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘கார்கி’ முதல் ‘கடாவர்’ வரை: இந்த வார ஓடிடி அப்டேட்!