தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்காக விழா நடத்துவது, கலைஞர்களை பாராட்டுவது, செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று.
தங்கலான் படத்தின் கதாநாயகன் விக்ரம் இதில் இருந்து வித்தியாசமாக விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து திரைக்கலைஞர்களையும், தொழிலாளர்களையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிவெளியானது தங்கலான். வழக்கமான சினிமா படப்பிடிப்பாக தங்கலான் நடத்தப்படவில்லை.
காடு, மலைகள் என கரடு முரடனான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெறவில்லை என்ற போதிலும் படம் உருவாக கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க படத்தின் கதாநாயகன் என்ற முறையில் நடிகர் விக்ரம் நேற்று விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் பங்கேற்க வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை விக்ரம் வரவேற்றார்.
பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்த விக்ரம். படத்தில் பணியாற்றியவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கையாலேயே உணவினை பரிமாறினார்.
இந்த நிகழ்வில் விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் குற்றச்சாட்டு… நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு!
பியூட்டி டிப்ஸ்: தொப்பையைக் குறைக்க பெல்ட் அணிபவரா நீங்கள்?
அரசுப் பள்ளியில் புதிய மேற்கூரை விழுந்து மாணவர்கள் காயம்!
“வாய்ப்புகளின் பூமி” : அமெரிக்காவிலிருந்து ஸ்டாலின் ட்வீட்!