தமிழ்த் திரைத்துறையின் பிரபல நடிகரான விக்ரம் , நேற்று (ஜூலை 7) இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட விக்ரமுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுதும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார் விக்ரம். அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட தகவலே இன்று பிற்பகல்தான் வெளியே தெரிந்தது.
இதையடுத்து அவரது திரையுலக நண்பர்களும், உறவினர்களும் அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டனர்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ விக்ரம் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று இரவு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு தேவையான சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்போது நலமாக உள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு செல்வார்” என்றார்கள்.